பதிவு செய்த நாள்
27
டிச
2018
12:12
திருவண்ணாமலை: விஸ்வகர்ம மடாலயத்தின், 64-வது பீடாதிபதி சிவசண்முக ஞானாச்சாரிய குரு சுவாமிகள், நேற்று (டிசம்., 26ல்) முக்தியடைந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, காந்தப்பாளையத்தில், 1,418 ஆண்டுகள் பழமையான விஸ்வகர்ம மடாலயம் உள்ளது.
இதன், 64-வது பீடாதியாகவும், திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமயகோளரி நாத ஆதீனம், 38-வது பீடாதிபதியுமாக இருந்தவர் சிவசண்முக ஞானாச்சாரிய குரு ஸ்வாமிகள், 97; நேற்று(டிசம்., 26ல்) காலை, 11:00 மணிக்கு, முக்தியடைந்தார். இறுதிச் சடங்குகள், இன்று (டிசம்., 27ல்) மாலை, 3:00 மணிக்கு, விஸ்வகர்ம மடாலயத்தில் உள்ள நந்தவனத்தில் நடக்கிறது.