பதிவு செய்த நாள்
27
டிச
2018
12:12
சென்னை: கிழக்கு தாம்பரத்தில், பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், 12 ஜோதிர் லிங்க தரிசன நிகழ்ச்சி, நேற்று (டிசம்., 26ல்) துவங்கியது.
இந்தியாவில், சோமநாதர், விஸ்வநாதர்,திரியம்பகேஷ்வரர், ஓங்காரேஷ்வரர், மகா காமேஷ் வரர், நாகேஸ்வரர், வைத்யநாதர், கிருஷ்ணேஷ்வர், பீமா சங்கர், கேதார்நாதர், மல்லிகார்ஜுன், ராமேஸ்வரர் ஆகிய, 12 முக்கியஸ்தலங்களில் உள்ள, சிவ லிங்க வழிபாடுபிரசித்தி பெற்றது. லிங்க வடிவில் அருள்பாலிக்கும் சிவபெருமானை, ஜோதியாய், மனதில் நினைத்து, புத்தி யின் மூலம் தியானம் செய்வதே, ராஜயோகதியானம் எனப்படுகிறது.
அது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில், 12 ஜோதிர் லிங்கங்களையும், ஒரே இடத்தில்தரிசிக்கும் வகையில், 10 ஆண்டுகளாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில், இந்த தரிசன நிகழ்வை நடத்தி வருகிறது.அந்த வகையில், சென்னை, கிழக்கு தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம் சாலையில் உள்ள, ஸனந்தா திருமண மண்டபத்தில், 12 ஜோதிர் லிங்க தரிசன காட்சி, நேற்று (டிசம்., 26ல்) துவக்கப்பட்டது. டிச., 30ம் தேதி நடத்தப்படும் இந்த தரிசன நிகழ்விற்கு, காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.