திருமங்கலம் மீனாட்சி- சொக்கநாதர் கோயிலில் 40 ஆண்டுக்கு பின் அஷ்டமி சப்பரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2018 12:12
திருமங்கலம்: திருமங்கலம் மீனாட்சி- சொக்கநாதர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டமி சப்பர ஊர்வலம் நடக்கிறது, என, நிர்வாக அலுவலர் சர்க்கரை யம்மாள் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இக்கோயிலில் டிச., 29 அஷ்டமி சப்பரம் வலம்வரவுள்ளது. கோயிலில் புறப்படும் சப்பரம் போலீஸ் பீட், விருதுநகர் ரோடு என்.எஸ்.வி., மஹால், பசும்பொன் தெரு, பி.டி.ராஜன் தெரு, எட்டுப்பட்டறை முத்துமாரியம்மன் கோயில் வழியாக மீண்டும் கோயில் வந்தடையும் என்றார்.