செம்பட்டி: ஐயப்ப சேவா சங்கம் சார்பில், செம்பட்டி சக்தி விநாயகர் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. உலக நலன் வேண்டி சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. குருசாமி திருஞானம் முன்னிலை வகித்தார். ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு வழிபாடு நடத்தினர். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, படி பூஜை நடந்தது. சரணகோஷத்துடன் மகா தீபாராதனை நடந்தது. அன்னதானத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.