பதிவு செய்த நாள்
27
டிச
2018
01:12
கொடுமுடி: கொடுமுடி வட்டாரம், கிளாம்பாடி கிராமம், சாணார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் விழா கடந்த, 25ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று (டிசம்., 26ல்) மாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு 108 பால்குடம் எடுத்து வருதல், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, இரவு 8:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா, 11:00 மணிக்கு, முப்பாட்டு மாவிளக்கு எடுத்து வந்து பெரும் பூஜை நடைபெற்றது. இன்று(27), மதியம் 12:00 மணிக்கு, காவிரி சென்று தீர்த்தக்குடம் எடுத்து வருதல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி, இரவு 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை, அலங்கார பூஜை, 10:00 மணிக்கு, கரகாட்ட நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை (28), காலை 11:00 மணிக்கு, தாரை, தப்பட்டை உடுக்கை முழங்க, பகவதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.