பதிவு செய்த நாள்
27
டிச
2018
01:12
கொடுமுடி: ஊஞ்சலூரில் நேற்று (டிசம்., 26ல்) ஐயப்பன் ஆராட்டு விழா நடைபெற்றது. கொடுமுடி வட்டாரம், ஊஞ்சலூர் நாகேஸ்வர சுவாமி கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு, நேற்று(டிசம்., 26ல்)
53வது ஆண்டு, மண்டல பூஜை மற்றும் ஆராட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, காலை, 5:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கி, காலை, 8:00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு, தீர்த்தவாரி என்னும் ஆராட்டு விழா நடைபெற்றது. காலை, 11:00 மணிக்கு, சங்காபிஷேகம், சிறப்பு யாகபூஜை மற்றும் பகல், 12:30 மணிக்கு, மஹா தீபாராதனை, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, நாதஸ்வரம், மேளக்கச்சேரியுடன், பஜனை மற்றும் திருவிளக்கு பூஜையும், மாலை 6:30 மணிக்கு, மஹா தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில், ஊஞ்சலூர், கொளத்துப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.