பதிவு செய்த நாள்
27
டிச
2018
01:12
கிருஷ்ணகிரி: தேசத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை, பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, சாலூரில், தேசத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. வாலிப்பட்டி, கண்ணுகானூர், கருப்பேரி, பெரமனூர், வேலாவள்ளி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள், 1,000க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, இறைச்சி சமைத்து உறவினர்களுக்கு விருந்தளித்தனர். கிடா வெட்டுதல் நிகழ்ச்சி காலை, 10:00 மணிக்கு துவங்கி, மாலை, 3:00 மணி வரை நடைபெற்றது. பக்தர்கள் குடும்பத்துடன் வரிசையில் காத்திருந்து ஆடுகளை பலியிட்டனர்.