மதுரை, ஸ்ரீ ஆப்தன் சபா சார்பில் ஐயப்பனுக்கு மண்டலாபிஷேகம் மதுரை தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்தது. பக்தர்கள் கலசங்கள் எடுத்துவர, ஐயப்பன் சிலை பவனி வந்தது. 12 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சுவாச நேசி யோகா மைய மாஸ்டர் மூர்த்தி துவக்கி வைத்தார். குருசாமி ஹரிஹரன் தலைமை வகித்து பூஜைகளை நடத்தினார். பாடகர் நாகராஜுவின் பக்தி இன்னிசை, மதுரை ரவியின் வயலின் நிகழ்ச்சிகள் நடந்தன. படிபூஜை, ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. ஆப்தன் சபா செயலர் மங்கையர்க்கரசி தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.