பதிவு செய்த நாள்
28
டிச
2018
12:12
பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில், 16 நாட்களில் ரூ. 2 கோடியே 4 லட்சத்து 49 ஆயிரம் வசூலாகியுள்ளது. தைப்பூசவிழா வருகை, சபரிமலை சீசனை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் 16 நாட்களில் நிரம்பிய உண்டியல்கள் திறக்கப்பட்டு, கார்த்திகை மண்டபத்தில் எண்ணும் பணி நடந்தது.இதில் தங்கம்- 615 கிராம், வெள்ளி -9,640 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் -1,054 மற்றும் ரொக்கம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 49 ஆயிரத்து 420 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன், மேலாளர் உமா, வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.