பதிவு செய்த நாள்
29
டிச
2018
01:12
சென்னை: சென்னையில், பூர்ண புஷ்களாம்பாள் சமேத தர்ம சாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம், நாளை நடைபெறுகிறது.சென்னை, தி.நகர், வடக்கு போக் சாலை, காந்திமதி கல்யாண மண்டபத்தில், பூர்ண புஷ்களாம்பாள் சமேத ஸ்ரீ தர்ம சாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம், நாளை நடைபெறுகிறது.இன்று காலை, 6:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமமும்; காலை, 8:30 மணி முதல், 12:30 மணி வரை, லட்சார்ச்சனை, மஹா தீபாராதனை, அன்னதானமும் நடக்கிறது.மாலை, சம்ப்ரதாய பஜனை, கணேசாதி தியானங்கள், விஷ்ணு சஹஸ்ரநாம, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், கன்யாபூஜை, குரு பூஜையும் நடக்கின்றன. இரவு, ஜானவாசம், டோலோத்சவம் நடக்கின்றன.நாளை காலை, 8:00 மணி முதல், சம்ப்ரதாய உஞ்சவிருத்தி தோடக மங்களம், திவ்யநாமம், தீபப்ரதக் ஷிணம், சாஸ்தா வரவு பாடல்கள், மாலை மாற்றுதல், முத்து குத்துதல் போன்ற வைபவங்கள் நிகழ உள்ளன. இறுதியில், திருக்கல்யாணம் நடக்கும்.காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான பாகவதர், வி.எஸ்.சிவசுப்ரமண்ய பாகவதர் முன்னிலையில், விமரிசையாக திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.நலங்கு, ஆஞ்சநேயர் உற்சவத்தை தொடர்ந்து, திருக்கல்யாண பிரசாத விருந்து வழங்கப்படும்.