திருச்செந்துார் கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 80 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2018 01:12
துாத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று உண்டியலில் காணிக்கையாக ஒரு கோடியே 80 லட்சத்து 71 ஆயிரத்து 187 ரூபாய் கிடைத்தது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல்கள் எண்ணும் பணி நடக்கிறது. டிசம்பர் மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி டிச. 11ம் தேதி மற்றும் நேற்றும் நடந்தது. கோயில் இணை ஆணையர் பாரதி தலைமையில் தக்கார் பிரதிநிதி ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னிலையில் கோயில் பணியாளர்கள், உழவாரப்பணிக்குழுவினர் ஆகியோர் ஈடுபட்டனர்.காணிக்கையாக ஒரு கோடியே 80 லட்சத்து 71 ஆயிரத்து 187 ரூபாய் கிடைத்தது. இதில் திருப்பணி உண்டியலில் இரண்டு லட்சத்து 37 ஆயிரத்து 488 ரூபாய், யானை பராமரிப்பு உண்டியலில் 33 ஆயிரத்து 236 ரூபாய், கோயில் அன்னதான உண்டியலில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 953 ரூபாயும், சிவன் கோயில் அன்னதான உண்டியலில் 10 ஆயிரத்து 739 ரூபாயும் அடங்கும். இதனை தவிர ஆயிரத்து 348 கிராம் தங்கமும், 14 ஆயிரத்து 911 கிராம் வெள்ளியும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.