திருப்புத்துார்: திருப்புத்துாரில் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் ஆர்கே மகாலில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் துவங்கியது.குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை வகித்தார்.
பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள்,பிரம்மகுமாரிகள் துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் உமா துவக்கி வைத்தனர். ஆ.பி.சீ.அ.கல்லுாரி தாளாளர் ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மன அமைதி அளித்திடும் தியான அறை, பிரச்னைகளுக்கு தீர்வு காண ஹெல்ப் லைன், ஆன்மிக விளையாட்டு, தத்துவங்களின் ஒலி,ஒளிக்காட்சி, அஷ்ட லட்சுமிகளின் தரிசன அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன. தினசரி காலை 6:00 முதல் காலை 11:00 மணி வரையிலும், மாலையில் 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் நாளை வரை மக்கள் தரிசனம் செய்யலாம். மேலும் புத்தாண்டு முதல் ஏழு நாட்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. காலை 10:30 மாலை 6:30 ஆகிய நேரங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.