தேய்பிறை அஷ்டமியையொட்டி சிவபுரிபட்டியில் வடுகபைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.சிங்கம்புணரி, டிச. 30-சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் வடுக பைரவர் பூஜை நடந்தது. இக்கோயிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை 10:00 மணிக்கு சன்னதி முன் யாக குண்டம் அமைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து பைரவருக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.