புதுச்சேரி: வில்லியனுாரில், அய்யப்ப சேவா சமாஜம் சார்பில் தீப ஜோதி ஊர்வலம் நடந்தது. புதுச்சேரி சபரிமலை அய்யப்பா சேவா சமாஜம் சார்பில், சபரிமலையின் புனிதத்தையும், ஆச்சாரங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி, தீபஜோதி ஊர்வலம், வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் துவங்கியது.இந்த ஊர்வலத்தில் அய்யப்ப பக்தர்கள், சிறுமிகள், பொதுமக்கள் பங்கேற்று, அய்யப்பன் படம் மற்றும் விளக்கு தட்டுகளுடன், ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் வில்லியனுார் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.