பதிவு செய்த நாள்
01
ஜன
2019
01:01
கோவை:ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், 68வது பூஜா மஹோத்ஸவம், புத்தாண்டில் மகா தீபாராதனையுடன் நிறைவடைந்தது.கோவை, ராம்நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள, ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில், 68வது பூஜா மஹோத்ஸவம் கடந்த டிசம்பர், 26ல் ஸ்ரீகணபதி ஹோமத்துடன் துவங்கியது.
அதை தொடர்ந்து, 5 நாட்களும், சிறப்பு பூஜைகளும், உபநிஷத் பாராயணமும் நடந்தது.68வது பூஜா மஹோத்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று (டிசம்., 31ல்) இரவு 9:0 மணிக்கு, மேட்டுப் பாளையம் ஸ்ரீ வாசுதேவன் குழுவினரின் திவ்ய நாம பஜனை நடந்தது. இரவு, 12:00 மணிக்கு புத்தாண்டை வரவேற்கும் விதமாக, மஹா தீபாராதனை நடந்தது. அதன் பின், பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட நாணயம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பரவசமடைந்தனர்.