Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி கொண்டாட்டம் : ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின் பாகிஸ்தானில் இந்துக் கோவில் புதுப்பிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 பிப்
2012
10:02

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரில், நீண்ட காலப் போராட்டத்துக்குப் பின் ஓர் இந்துக் கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.கராச்சியின் ஜாம்ஷெட் டவுன் அருகிலுள்ள "சோல்ஜர் பஜார் என்ற இடத்தில், 1,500 ஆண்டுகள் பழமையான பஞ்சமுகி அனுமான் மந்திர் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலின் மூலஸ்தானத்தில், எட்டு அடி உயரம் கொண்ட, சுயம்பு அனுமான் விக்கிரகம் இருக்கிறது. அதனால் அப்பகுதி இந்துக்கள் மத்தியில், இக்கோவில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. கராச்சியின் பல கோவில்களின் நிலைமையைப் போலவே, இக்கோவிலைச் சுற்றியிருந்த நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டன. இவற்றில் ஒரு பாதியை கோவில் நிர்வாகம் மீட்டிருக்கிறது. இன்னும் அது தொடர்பான வழக்குகளும் நடந்து வருகின்றன. அதேநேரம் கோவிலைப் புதுப்பிக்கும் பணிகளும் பல்வேறு இடையூறுகளுக்கிடையில் நடந்து வருகின்றன. மொத்தம், 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இப்பணிகள், இடையில் நன்கொடைகள் வராததால் தேங்கிக் கிடந்தன. எனினும், சிந்து மாகாணத்தின் சிறுபான்மை அமைச்சகம் அளிக்கும் நிதியுதவியைப் பெறாமல், ஏழை இந்துக்கள் மற்றும் முட்டாகிதா குவாமி இயக்கம் ஆகியோரின் உதவியால், நன்கொடைகள் திரட்டப்பட்டு வருகின்றன.மொத்த மதிப்பீட்டில் பாதியளவு நன்கொடைகள் திரட்டப்பட்ட நிலையில், கோவிலின் மூலஸ்தானம் தவிர, மடைப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகள், புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பழைய கற்கள் அகற்றப்பட்டு புதிய கற்களால் சுவர் எழுப்பப்பட்டு வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar