செந்துறை: செந்துறை அருகே மணக்காட்டூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சபரிமலை யாத்திரையை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். கடந்த டிச.29 அன்று அய்யனார் அருவியில் இருந்து பக்தர்கள் தீர்த்தமாடி வந்தனர். மறுநாள் மாலை கிராம தேவதைகளுக்கு கனி மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோயிலில் தோரணம் கட்டப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை முதல் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டினர். பகலில் கோயில் முன்பு அன்னதானம் நடந்தது. இரவு மின் அலங்கார ரதத்தில் மணக்காட்டூர் முக்கிய வீதிகளில் சுவாமி வலம் வந்தார்.நேற்று காலை பக்தர்கள் பாலாற்றில் நீராடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்ட பெண் உட்பட 70 பக்தர்கள் பூக்குழி இறங்கி யாத்திரையை துவங்கினர். ஊர் பொதுமக்கள் சார்பில் மதன், சின்னச்சாமி, ஈஸ்வரன் உள்ளிட்ட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.