விழுப்புரம்;ஆங்கில புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜையும், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
ஆங்கில புத்தாண்டையொட்டி மயிலம் முருகர் கோவில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், விழுப்புரம் ஆஞ்ச நேயர் கோவில், கள்ளக்குறிச்சி சீனுவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று (ஜன., 1ல்) அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மக்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று கிறிஸ் துவ தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் (டிசம்., 31ல்) நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், பங்கேற்ற கிறிஸ்துவர்கள் ஒருவருக் கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.