பதிவு செய்த நாள்
02
ஜன
2019
02:01
தேனி:ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சர்ச்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேனி என்.ஆர்.டி., நகரில் உள்ள கணேச கந்த பெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் ரோடு பெத்தாட்சி விநாயகர் கோயில், வேல்முருகன் கோயில், அல்லிநகரம் ஆஞ்சநேயர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில் சிறப்பு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
* என்.ஆர்.டி.,நகரில் உள்ள சி.எஸ்.ஐ., பரிசுத்த பவுல் சர்ச்சில் போதகர் ஜேக்கப்வின்சிலின் தலைமையில் நேற்றுமுன்தினம் 31ல், இரவு 11:30 மணிக்கு நற்கருணை புரிந்த ஆண்டிற்கு நன்றி செலுத்தும் விதமாக ஆராதனை 12:00 மணி வரை நடந்தது. பின் 1:00 மணிக்கு புத்தாண்டு நற்கருணை ஆராதனை தொடர்ந்தது.
உதவி போதகர் தவராஜ் முன்னிலை வகித்தார். நேற்று (ஜன.,1ல்) காலை 9:30 மணிக்கு ஆராதனை தொடர்ந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
* தேனி - மதுரை ரோட்டில் உள்ள ஆர்.சி., சர்ச்சில் பாதிரியார் ஜான்மார்ட்டின் தலைமையில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.போடி: போடி சீனிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீ தேவி,
பூதேவியுடன் சுவாமி மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், சுவாமி அலங்காரத்தை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்தனர்.
* போடி கீழச்சொக்கநாதர் கோயில், தென்திருவண்ணமலை என அழைக்கப்படும் பரமசிவன் மலைக்கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், ஐயப்பன் கோயில், போடி புதூர் சங்கடஹர
விநாயகர்,அக்ரஹாரம் பாலவிநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
* போடி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் உலக அமைதி வேண்டி மாதாவிற்கு சிறப்பு வழிபாடுகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
* தென்னிந்திய திருச்சபை சர்ச்சில் குடும்ப நன்மை, உலக அமைதிக்காக சிலுவை வழிபாடு பிரார்த்தனை நடந்தது. நேற்று முன்தினம் (டிசம்., 31ல்) நள்ளிரவு 12 மணிக்கு மேல் புத்தாண்டை வரவேற்கும் வகையில், போடி முந்தல் ரோட்டில் கிரீன் ராயல் ரிசார்ட்ஸ்ல் வாண வேடிக்கையுடன் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். சிலம்பாட்டம், பாடல்கள் உள்ளிட்ட இன்னிசை கச்சேரியும் நடந்தது.
* பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
வரதராஜப்பெருமாள் கோயில், கம்பம்ரோடு காளியம்மன் கோயில், ஞானம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயில், குருவப்ப பிள்ளையார் கோயில், கைலாசபட்டி, கைலாசநாதர்
மலைக்கோயில், பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயில், தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி கோயில், லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு
பூஜை, தீபாராதனை நடந்தது.
நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கல்பதருதினத்தை முன்னிட்டு ராதை, கிருஷ்ணருக்கு அபிஷேக, ஆராதனை, துளசி வழிபாடு நடந்தது.சாய்பாபா பெரியகுளம் டாக்டர் தங்கவேல் நகர், இடுக்கடி லாட் பகுதியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் புத்தாண்டை ஒட்டி நேற்று முன்தினம் (டிச., 31ல்) இரவு ஆன்மிக கலை நிகழ்ச்சி, சாய்பஜனை, அபிஷேகம், நேற்று (ஜன.,1ல்) காலை ஆரத்தி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எம்.எம்.பி.டி., டிரஸ்ட் நிர்வாகிகள் டாக்டர் முத்துவிஜயன், வர்த்தக பிரமுகர் முத்துமகேஷ்வரன் செய்தனர்.
* கூடலூர்: கூடலூர் லோயர்கேம்பில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை, பாலாபிஷேகம் நடந்தது. சுவாமி மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம்,
ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக பலர் வந்திருந்தனர்.சுருளியாறு மின்நிலையம் ரோட்டில் உள்ள மங்கலநாயகி கண்ணகி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கூடல் சுந்தரவேலவர் கோயில், பாலசக்திவிநாயகர் கோயில், அங்காளபரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.கம்பம்:
கம்பம் கம்பராயப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
அபிேஷக, ஆராதனைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.வேலப்பர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். சிறப்பு பூஜைக்குப்பின் சுவாமி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்.
சாமாண்டியம்மன்கோயில், கவுமாரியம்மன் கோயில், உத் தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், நரசிங்கபெருமாள் கோயில், அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு
பூஜை நடந்தது.தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சிறப்பு பூஜை,
தீபாராதனை நடந்தது. கிராமங்களில் உள்ள குலதெய்வ கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.
* ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், பாலவிநாயகர் கோயில், ஜம்புலிபுத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், மேலவிநாயகர், கல்கோயில், பகவதியம்மன் கோயில்,
நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயில்களில் அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி மார்கழி மாத வழிபாட்டுடன் நடந்த புத்தாண்டு பூஜையில் பங்கேற்றனர்.