பதிவு செய்த நாள்
02
ஜன
2019
02:01
ராமேஸ்வரம்:புத்தாண்டு விழா யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி,
பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று 1ல் காலை முதல் ஏராளமான வட, தென் மாநிலம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்குள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்திருந்தனர்.
மேலும் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் உள்ள சூசையப்பர் சர்ச், குழந்தை ஏசு சர்ச், வேளாங்கண்ணி மாதா சர்ச்களில் சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதில் ஏராளமான
இறைமக்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
ராமநாதபுரத்தில் புத்தாண்டு தின கோலாகலம் சர்ச், கோயில்களில் வழிபாடு
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சர்ச், கோயில்களில் வழிபாடு நடத்தினர்.ராமநாதபுரத்தில் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தில் சிவன்கோயில்,
பெருமாள்கோயில், வெட்டுடையாள் காளியம்மன் கோயில், மல்லம்மாள் கோயில், வழிவிடும் முருகன்கோயில், உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். மீனாட்சி சொக்கநாதர் கோயிலில், சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெட்டுடையாள் காளி கோயிலில் தங்கக்கவசத்தில் அருள்பாலித்தார்.
சர்ச்சுகள்: ஆர்.சி., சர்ச்சுகள், சி.எஸ்.ஐ., ரேமா சர்ச், மாரநாதா சர்ச், டி.இ.எல்.சி., சர்ச்சுகளில் நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடந்தது. புத்தாண்டு கேக்வெட்டி அனை வருக்கும் வழங்கப்பட்டது. ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.
*கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு, பரதர்தெரு புனித அந்தோணியார் சர்ச்சில் சிறப்பு வழிபாடுகளும், ஆராதனைகளும் நடந்தன. பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பன்னாட்டார் தெரு அந்தோணியார் சர்ச்சில் புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனைகள் நடந்தது. சி.எஸ்.ஐ., தூய பேதுரு சர்ச்சிலும் நள்ளிரவு பிராத்தனை நடந்தது.
முத்துப்பேட்டை: புனித காணிக்கை அன்னை சர்ச்சில் இரவு 12:00 - 1:30 மணி வரை கூட்டுத்திருப்பலி நடந்தது. உலக மக்களின் சமாதானத்தை வலியுறுத்தியும், நன்மை வேண்டியும், ஜெப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கேக்குகள் வழங்கப்பட்டன. மூக்கையூர்
புனித யாகப்பார் சர்ச், மேலக்கிடாரம் மடத்தாகுளம் சி.எஸ்.ஐ., சர்ச், கடலாடி புனித அந்தோணியார் சர்ச், சவேரியார் பட்டிணம் புனித சவேரியார் சர்ச், சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி சர்ச் ஆகிய இடங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.
*பரமக்குடி அலங்காரமாதா சர்ச்சில் நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. காலை மீண்டும் திருப்பலி நடந்தது. பரமக்குடி வட்டார பங்குத்தந்தை செபஸ்தியான், உதவி
பங்குத்தந்தை லியோ திருப்பலியை நடத்தினர்.
*பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று (ஜன.,1ல்) காலை 5:00 மணி முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். முத்தாலம்மன், மீனாட்சி அம்மன், அனுமார்
கோதண்டராமசாமி கோயில், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் என அனைத்து கோயில்களிலும் பொதுமக்கள் வழிபட்டனர்.
* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி ஏகாம்பரேஸ்வரர், தீர்த்தான்டதானம் சகலதீர்த்தமுடையவர், திருவாடானை முத்து மாரியம்மன், பாரதிநகர் லட்சுமி விநாயகர் மற்றும் கிராமங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.