ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த வெளிநாட்டு பயணிகள் ஆண்டாள் கோயில் பயபக்தியுடன் வணங்கினர்.
தமிழகம் மற்றும் கேரள மக்களின் கலாசாரத்தை தெரிந்து கொள்வதற்கும், தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலங்கள் மற்றும் பாரம்பரிய கட்டடங்கள், வனப்பகுதிகளை அறிந்து கொள்ள ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 பேர் கடந்த டிச.28 முதல் ஆட்டோக்கள் மூலம் பயணித்து வருகின்றனர்.32 ஆட்டோக்களில் பயணிக்கும் இவர்கள், டிச.29 அன்று சென்னையிலிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து தஞ்சாவூர், மதுரை வழியாக நேற்று (ஜன.,2ல்) காலை 10:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தனர்.
ஆண்டாள் கோயிலின் பல்வேறு பகுதிகளை வியப்புடன் சுற்றிபார்த்த அவர்கள் ,ஆண்டாளை மிகவும் பயபக்தியுடன் வணங்கினர். ஆண்டாள் கிளி, தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கண்டு பிரமித்தனர். அதன்பின் தெற்குரதவீதி மன்னர் திருமலைநாயக்கர் அரண்மனையை பார்வையிட்டனர்.