திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூரில்இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற ஜன.,6ல் ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற உள்ளது.
திருக்கோஷ்டியூர் யாதவ திருமண மண்டபத்தில் நான்காவது ஆண்டாக நடைபெறும் இந்த ஹோமத்தில் விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். காலை 8:00 மணிக்கு ஸ்ரீசுதர்ஸன ஹோமம், ஸ்ரீஹயக்ரீவர் ஹோமம் துவங்கும். மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற வேண்டி பிரார்த்தனை நடைபெறும். ஹோமம் நிறைவடைந்த பின்னர் பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் ஆசி வழங்குவார். ஏற்பாட்டினை தமிழ்நாடு பிராமணர் சங்க திருக்கோஷ்டியூர் கிளையினர் செய்கின்றனர்.