வேலம்பாளையம் குப்பியண்ணசாமி கோவில் உண்டியலில் ரூ.2.33 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2019 02:01
ஈரோடு: விஷக்கடி நிவர்த்தி தலமாக விளங்கும், துக்காச்சி, 60 வேலம்பாளையம் குப்பியண்ண சாமி கோவில் உள்ளது. நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த, டிச.,21ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி, 31ல் மறுபூஜையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, கோவிலில் உள்ள நிரந்தர இரண்டு உண்டியல் உள்பட ஐந்து உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன. இரண்டு லட்சத்து, 33 ஆயிரத்து, 608 ரூபாய் கிடைத்ததாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.