பதிவு செய்த நாள்
06
ஜன
2019
01:01
கோவை:கோவையில், இஸ்கான் தேர்த்திருவிழா நேற்று பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினர் (இஸ்கான்), 27ம் ஆண்டாக இந்த தேர்த்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ஜெகன்னாதர், பலதேவர், சுபத்ரா தேவியார் எழுந்தருளியதும், சிறப்பு பூஜைகள் நடந்தன.மதியம் 2.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மூலவர் விக்கிரகங்களே, தேரில் பவனி வருவதுதான் இந்த தேரோட்டத்தின் சிறப்பு.விழாவுக்கு கிருஷ்ண பக்தி இயக்கத் தின் மூத்த தலைவர் பானு சுவாமி, மண்டல செயலாளர் பக்தி வினோத சுவாமி முன்னிலை வகித்தனர். ராஜவீதியில் புறப்பட்ட தேர், பக்தர்களின், ஹரே கிருஷ்ணா கோஷம் முழங்க ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர்முட்டியை வந்தடைந்தது. பக்தர்களின் ஆடல், பாடல், கோலாட்டம், கும்மியாட்டம், பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனத்துடன் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.இதையொட்டி, 25 கல்லுாரிகளை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். தேர் திருவீதி உலா முன்னிட்டு, கோவை நகரில் நேற்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.