பதிவு செய்த நாள்
07
ஜன
2019
12:01
கொடுமுடி: கொடுமுடியில், ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் உள்ள வீர ஆஞ்சநேய சுவாமி சன்னதியில், நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதைதொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு, வெண்ணெய்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக காலை 6:00 மணிக்கு, அனுமன் ஜெயந்தி விழா, மாலை 6:00 மணிக்கு மறு அபிஷேகம் நடந்து, பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை, வீர ஆஞ்சநேயருக்கு, முத்தங்கி அலங்கார சேவை நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் தரிசித்து, வீர ஆஞ்சநேயரை வணங்கிச்சென்றனர்.