பழநி மலையின் அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் திருவாவினன்குடி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வடகிழக்கு திசையில் சரவணப்பொய்கை தீர்த்தம் உள்ளது. பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடிய பின்னரே காவடி நேர்த்திக்கடனை செலுத்த புறப்பட வேண்டும் என்பது ஐதீகம். ஆவினன்குடி கோயிலில் மயில் மீது அமர்ந்த நிலையில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். வேலாயுத மூர்த்தி என்னும் திருநாமத்துடன் விளங்கும் இத்தலமே நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில் மூன்றாவது படை வீடாக குறிக்கப்பட்டுள்ளது. இங்கு முருகனைத் தரிசிக்க முனிவர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் அனைவரும் கூடி நின்றதாக நக்கீரர் குறிப்பிடுகிறார். நெல்லிவனம் என்னும் புராணப்பெயர் கொண்ட இத்தலத்தின் தலவிருட்சமாக நெல்லிமரம் உள்ளது. இங்கு தரிசித்த பின்னரே மலைக்கோவில் மூலவரான தண்டாயுதபாணியை தரிசிப்பது முறையாகும். இரவு 7.30 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் முத்துகுமாரசுவாமி வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி.