இந்துக்கள் திருக்கயிலாய யாத்திரை செல்ல நிதியுதவி வழங்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2012 10:02
சிதம்பரம்: இந்துக்கள் திருக்கயிலாய யாத்திரை செல்ல அரசு நிதியுதவி வழங்க வேண்டும், என, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நடராஜர் கோவிலை கடந்த ஆட்சியில் அரசு கையகப்படுத்தி உண்டியல் வைத்துள்ளது. இந்து கோவில்களைப் பாதுகாக்க அறவோர் வாரியம் அமைக்க வேண்டும் என, நாங்கள் போராடி வருகிறோம். இந்தக் கோவிலையும் அறவோர் வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை செல்லவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. அதே போன்று இந்துக்கள் தங்கள் புனிதத் தலமான திருக்கயிலாயம், முத்திநாத் பயணம் செல்வதற்கு அரசு 5,000 பேருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்வழங்க வேண்டும்.இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.