பதிவு செய்த நாள்
21
ஜன
2019
03:01
பொங்கலூர்:பொங்கலூர், அலகுமலை முத்துக்குமார சுவாமி பாலதண்டாயுதபாணி கோவிலில், இன்று (ஜன., 21ல்) தேரோட்டம் நடக்கிறது.பாலதண்டாயுதபாணி கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக கிராம சாந்தி பூஜைகள் நடத்தப்பட்டன. காலை, மாலையில் சுவாமி திருவீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் (ஜன., 19ல்)இரவு, வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.இன்று மதியம், 1:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
தொடர்ந்து, தீர்த்தக்காவடி குழுக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை (ஜன., 21ல்) காலை சுவாமி திருவீதியுலா, மாலையில் பரிவேட்டை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் சின்னசாமி, ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், விழாக்குழு உறுப்பினர்கள், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.