பதிவு செய்த நாள்
21
ஜன
2019
04:01
கரூர்: புகழிமலை கோவிலில், இன்று (ஜன., 21ல்) மாலை தேரோட்டம் நடக்கிறது. கரூர் அடுத்த, வேலாயுதம்பாளையம், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த, 15ல் கொடியேற்றத்துடன் தைப்பூசம் விழா துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும், உற்சவம் திருவீதி உலா, நேற்று (ஜன., 20ல்) திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இன்று (ஜன., 21ல்) மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை மாலை, 4:45 மணிக்கு மறு தேரோட்டம் வரும், 23ல், குதிரை வாகன மண்டகப்படி, 24ல் கொடியிறக்கம், 25ல் விடையாத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.