பதிவு செய்த நாள்
21
ஜன
2019
05:01
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூரில், ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜன., 20ல்)விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள அம்மையப் பநல்லூரில் உள்ளது, ஆதி கேசவ பெருமாள் கோவில். பிரசித்தி பெற்ற பழமையான இக்கோவிலுக்கு கும்பாபி ஷேகம் நடத்த, அப்பகுதிவாசிகள் முடிவு செய்தனர்.அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றன.
அந்த பணிகள் முடிந்த நிலையில், ஜன., 20 ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, நேற்று (ஜன.,20ல்) காலை, கோ பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
காலை, 10:30 மணிக்கு, கோவிலில் உள்ள சன்னிதிகளின் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப் பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காணவும், பெருமாளின் அருள் பெறவும், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான கிராமவாசிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.