பதிவு செய்த நாள்
21
ஜன
2019
05:01
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், ராமானுஜரின் குரு புஷ்ய விழா விமரிசையாக நடக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. ராமானுஜரின் அவதார தலமான இந்த கோவிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே செய்யப்பட்ட, தானுகந்த சிலை, தை பூசம் அன்று, இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.அதை நினைவு கூரும் வகையில், ஆண்டு தோறும் தை மாதம் வரும் திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய மூன்று நட்சத்திர நாட்களில், குரு புஷ்ய உற்சவ விழா, விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்தாண்டு குரு புஷ்ய உற்சவ விழா நேற்று முன்தினம் (ஜன., 19ல்) துவங்கியது. தினமும் காலை, மாலையில், ராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.