பதிவு செய்த நாள்
22
ஜன
2019
10:01
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இத்திருவிழா ஜன., 12 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது.
நேற்று காலை தைப்பூசத்தையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள், கலச அபிஷேகம், தீர்த்த கலச ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சஷ்டி மண்டப வளாகத்தில் 16 வகை அபிஷேகங்கள், சரவிளக்கு தீபாராதனைகள் நடந்தன. முன்னதாக மூலவர் சுவாமி, வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதியில் விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை கொடி இறக்கம் நடந்தது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்தனர்.