காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், மூன்று நாட்கள் நடைபெறும் தெப்போற்சவத்தில், முதல் நாள் உற்சவம் நேற்று துவங்கியது.நேற்று இரவு, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார் மற்றும் பெருந்தேவி தாயாருடன், அனந்தசரஸ் என, அழைக்கப்படும் தெப்ப குளத்தில், பெருமாள் எழுந்தருளினார்.முதல் நாளான நேற்று, தெப்ப குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரண்டாம் நாளான இன்று ஐந்து முறையும், மூன்றாம் நாளான, நாளை ஏழு முறையும், தெப்பகுளத்தில் வலம் வருகிறார்.