பதிவு செய்த நாள்
22
ஜன
2019
02:01
விழுப்புரம்:விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை சமரச சுத்த சன்மார்க்க சத்திய டிரஸ்ட் சார்பில் 78 வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் நடந்தது.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு வள்ளலார் அருள்மாளிகையில் நேற்று (ஜன., 21ல்) 148வது ஆண்டு ஜோதி தரிசன பெருவிழாவை யொட்டி, காலை 6.00 மணி, 10.00, மதியம் 1.00 மணி, இரவு 7.00 மணிக்கும், 10.00 மணிக்கும், 22ம் தேதி காலை 5.30 மணிக்கும் ஏழு திரைகள் நீக்கி ஆறு கால ஜோதி தரிசனம் நடந்தது.
நிகழ்ச்சியில், டிரஸ்டி நிர்வாகிகள் கலியபெருமாள், அரங்கநாதன், நாகராஜன், சுப்ராயன், அழகானந்தம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, டிரஸ்ட் மேலாளர் அண்ணாமலை செய்திருந்தார்.