பதிவு செய்த நாள்
22
ஜன
2019
03:01
திருப்பூர்:திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, (ஜன., 21ல்)திருவாசகம் முற்றோதல் வழிபாடு நடந்தது.அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், மாதந் தோறும், 3வது திங்களன்று, திருவாசகம் முற்றோதல் வழிபாடு நடக்கிறது.
அதன்படி, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, (ஜன., 21ல்)திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.அர்த்தசாம பூஜை அடியார் திருக்கூட்டத்தினர், விஸ்வேஸ்வரர் -விசாலாட்சி அம்மனை வணங்கி, 63 நாயன்மார் மண்டபத்தில், திருவாசகம் பாராயணம் செய்தனர்.காலை, 7:00 மணிக்கு துவங்கி, மதியம், 2;15 மணி வரை, முற்றோதல் நடத்தி, சிவபெருமானையும், நாயன்மார்களையும் வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, வழிபாடுகள் நடந்தது. அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.