பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
ப.வேலூர்: ப.வேலூர், ராஜா சுவாமி கோவில் கும்பாபிஷேகம், பிப்., 10 காலை, 8:31 மணிக்கு மேல் நடக்கவுள்ளது. முன்னதாக, பிப்., 7 அதிகாலை, மஹா கணபதி யாகத்துடன் விழா
தொடங்குகிறது.
தொடர்ந்து, காவிரிக் கரையிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், முதல் கால யாக வேள்வி, கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்., 9ல் யாக பூஜை, நான்காம் கால யாக வேள்வி; மறுநாள் காலை, புதிய தோரண வாயிலில் கும்பாபிஷேகம், ராஜாசுவாமி கோபுர கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. யாகத்திற்கு தேவையான பொருள்களை பக்தர்கள் வழங்கலாமென, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.