பதிவு செய்த நாள்
25
ஜன
2019
01:01
மல்லசமுத்திரம்: எஸ்.மேட்டுபாளையம், மகா மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக விழா, 27ல் நடக்கிறது. மல்லசமுத்திரம் ஒன்றியம், மின்னாம்பள்ளி கிராமம், எஸ்.மேட்டுபாளையம் அருந்ததியர் தெருவில், மகா கணபதி, மாரியம்மன், மதுரை வீரன், பால முருகன், கருப்பணார் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இன்று, கிராம சாந்தியுடன் விழா துவங்குகிறது. நாளை காலை, 7:35 மணிமுதல், இரவு, 10:00 மணி வரை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், தீர்த்தக்குடம், முளைப்பாலிகை அழைத்தல், திருவிளக்கு பூஜை, முதல்கால யாக வேள்வி, கோபுரக் கலசம் வைத்தல், தீபாராதனை. மறுநாள் அதிகாலை, 4:35மணிக்கு மேல், இரண்டாம் கால யாக வேள்வி, சோமகும்ப பூஜை, கடம் புறப்பாடு; 8:05 - 9:05 மணிக்குள் கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி, கும்பாபி?ஷகம், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.