பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
சேலம்: சேலம் பள்ளப்பட்டி, உண்ணாமுலை உடனமர் அண்ணா மலையார், மாரியம்மன், முனியப்பன் கோவில்களில், திருநெறிய தீந்தமிழ், திருக்குட நன்னீராட்டு பெருவிழா, நாளை நடக்கிறது. கடந்த, 17ல், முளைப்பாலிகை இடுதல் நிகழ்வோடு, விழா தொடங்கியது. நேற்று முன்தினம், தீர்த்தக்குட ஊர்வலம், நேற்று, முத்தமிழால் முதற்கால வேள்வி உள்ளிட்ட நிகழ்வு நடந்தது. இன்று, இரண்டு, மூன்றாம் கால வேள்வி நடக்கிறது. நாளை காலை, 5:00 மணிக்கு, தத்திங்கா நாசிதா, மதுரை வீரன் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், கன்னிமார், பாட்டியம்மன், முனியப்பன், அம்சா அம்மன், கரிகாளி, மாரியம்மன் பதி ஆகிய தெய்வங்களுக்கு, திருக்குட நன்னீராட்டு விழா நடக்கும். காலை, 6:00 மணிக்கு, திருச்சுற்று தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு, 7:30 மணிக்கு, நான்காம் கால வேள்வி, 9:30 மணிக்கு, மாரியம்மன், உண்ணாமுலை அம்மன், அண்ணாமலையார் விமானங்களுக்கு நன்னீராட்டு நிகழ்வு நடக்கும். இதையொட்டி, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, அண்ணாமலையார் திருக்கோவில் அறக்கட்டளை, மாரியம்மன் நற்பணி மன்றம் மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.