பதிவு செய்த நாள்
26
ஜன
2019
01:01
திருத்தணி: அகூரில், மலைக்கோவில் உற்சவர், முருகப் பெருமான், சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா வந்து,பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருத்தணி அடுத்த, அகூர் கிராமத்திற்கு, ஆண்டுக்கு ஒரு முறை, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை யுடன் வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.அந்த வகையில், நேற்று முன்தினம் காலை, மலைக்கோவிலில் இருந்து, படிகள் வழியாக, மேல் திருத்தணிக்கு வந்தார்.பின், அலங்கரிக்கப்பட்ட பெருமான்,மேல்கசவராஜபேட்டை, முருகூர் வழியாக, மாலை, 4:00 மணிக்கு, அகூர் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்குசென்றார்.இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில்,அகூர் கிராம வீதிகளில்,நேற்று, அதிகாலை, 4:30 மணிக்கு வரை வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உற்சவர் வருகையை யொட்டி, தெருக்களில் வண்ணக்கோலங்கள் வரைந்து, பெண்கள் பூஜை செய்தனர். பின், உற்சவர் முருகப்பெருமான் மலைக் கோவிலுக்கு வந்தடைந்தார்.