சிதம்பரம், குடியரசு தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில், தேசியக் கொடி ஏற்றப்பட்டது.நாட்டின் 70வது குடியரசு தினத்தையொட்டி, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், பொது தீட்சிதர்கள் சார்பில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.நடராஜர் சன்னதி சித்சபையில் தேசியக்கொடியை வெள்ளித் தட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்து, மேள தாளங்கள் முழங்க கிழக்கு கோபுர உச்சிக்கு எடுத்துச் சென்று, காலை 8:00 மணிக்கு கொடி ஏற்றினர்.கடந்த 1950ம் ஆண்டு முதல், குடியரசு தினத்தன்று இக்கோவிலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது.