பதிவு செய்த நாள்
28
ஜன
2019
10:01
விருதுநகர்: விருதுநகரில் மீனாட்சி உடனுறை சொக்கநாதசுவாமி கோயிலில் 63 நாயன்மார்கள் நுாற்றாண்டு விழா நடந்தது. இக் கோயிலில் 1919 ம் ஆண்டில் 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்கள், நான்கு சமயக்குரவர்கள், சகஸ்தர லிங்கம், உமா தேவியார் உள்ளிட்ட விநாயகருடன் பிரதிஷ்டை செய்து நுாறு ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் கணபதி ஹோமத்துடன் நுாறாண்டு விழா துவங்கியது.
சிறப்பு தீபாராதனை, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று 63 நாயன்மார்களுக்கு யாக பூஜை, வேள்வி, சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தேசமங்கையர்கரசி‘ அடியார்க்கு அடியார்’ என்ற தலைப்பில் பேசினார். இரவு 63 நாயன்மார்கள் சிறப்பு அலங்காரத்துடன் சிவன் கோயிலில் ஊர்வலம் துவங்கியது. ரத வீதிகளை சுற்றி மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதில் 63 பெண்கள் திருவிளக்கு, நாயன்மார்கள் படம் தாங்கி ஊர்வலத்தில் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று அருள் பெற்றனர். விழா ஏற்பாடுகளை ஆயிர வைசிய காசுக்கார செட்டியார்கள் மகாசபை தலைவர் சந்திரசேகரன், செயலாளர் நாகஷே், பொருளாளர் ராமசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.