தூத்துக்குடி:மனதை ஒருமுகப்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும்,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் 3,000 பேர் சூரிய நமஸ்காரத்தில் ஈடுபட்டனர். விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரமும், அதன் கோவில்பட்டி கிளையும் இணைந்து, இந் நிகழ்ச்சியை நடத்தின. 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 3,000 பேர் சூரிய நமஸ்காரம் செய்தனர்.