கிள்ளை:கிள்ளை அருகே சி.முட்லூரில் கன்னித்திருவிழா நடந்தது.திருமணம் ஆகாதவர் களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், விவசாயிகள் தங்கள் வயல்களில் தானியங்கள் செழிக்கவும், பொங்கல் முடிந்து 10ம் நாளில் கன்னித்திருவிழா நடத்தினால் வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் அனைத்தும் சிறப்பாக நடக்கும் என்ற ஐதீகத்தை சி.முட்லூர் பகுதி மக்கள் கடை பிடித்து வருகின்றனர்.
அதன்படி சி.முட்லூர், ஆ.மண்டபம், அம்புபூட்டியபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கன்னி தேவதைகளுக்கு வழிபாடு நடத்தி, அனைவரும் ஆடிப்பாடி, கும்மியடித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சி.முட்லூர் வெள்ளாற்றில் கரைத்தனர்.