செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2019 12:01
செஞ்சி:செஞ்சி கோட்டை வெங்கட்ராமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடந்தது.செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் மழை வேண்டியும், உலக நன்மைக் காகவும் நாலாயிர திவ்ய பிரபந்த சேவை நடந்தது.இதை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்தனர். தொடர்ந்து பாகவதர் மற்றும் ஆண்டாள் கோஷ்டியினர் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்தனர். எட்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவை ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி துவக்கி வைத்தார்.