பதிவு செய்த நாள்
28
ஜன
2019
12:01
திருவண்ணாமலை: சேலம் மாவட்டம், கெங்கவள்ளி அடுத்த, கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த மூக்குபொடி சித்தர், 85; இவர், திருவண்ணாமலையில், கடந்த, டிச.,9ல், காலை, 2:00 மணிக்கு முக்தியடைந்தார். இதை முன்னிட்டு நடந்து வந்த சிறப்பு பூஜையில், நேற்று (ஜன., 27ல்), 48ம் நாள் மண்டல பூஜை நடந்தது. கலெக்டர் கந்தசாமி உள்ளிட்டோர், அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.