விக்கிரவாண்டியில் கைலாசநாதர் கோவில் கருவறை பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2019 12:01
விக்கிரவாண்டி:தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் கருவறை கட்டுமான பணிக்கான சிறப்பு பூஜை நடந்ததுவிக்கிரவாண்டி அருகே உள்ள தொரவியில் பழமை வாய்ந்த பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்ததால் புதியதாக கருங்கல் கட்டடபணிகள் நடந்து வருகிறது. நேற்று (ஜன., 27ல்) காலை கைலாசநாத ருக்கு கருவறை கட்ட பூமி பூஜை செய்து கட்டுமான பணி துவங்கியது.அதனையொட்டி விநாயகர், முருகர், நந்தி, உற்சவர் சிவகாமி உடனுறை நடராஜர் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்தனர். சிவனடியார் கலியபெருமாள் குழுவினர் திருவாசகம், தேவார பாடல்களை பாடி மகா தீபராதனை நடந்தது.