பதிவு செய்த நாள்
28
ஜன
2019
12:01
உளுந்தூர்பேட்டை:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் திருக்குர் ஆன் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நேற்று (ஜன., 27ல்) நடந்தது. மாநாட்டில் மாநில தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி, மாநில பொதுச் செயலாளர் முஹம்மது, மேலாண்மை குழு தலைவர் சுலைமான், மேலாண்மை குழு உறுப்பினர்கள் முக்மதுஒலி, அப்துல்நாசிர், மாநில செயலர் அப்துல்கரீம், பேச்சாளர்கள் ரகமத்துல்லாஹ், சுலைமான், அப்துல்ரகுமான் பிர்தவ்ஸி சிறப்புரையாற்றினர்.
மாநில துணை தலைவர் அப்துல்ரகுமான் மாநாட்டு தீர்மானங்கள் வாசித்தார்.மாநாட்டில், முத்தலாக் தடை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும். பூர்ண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில பொருளாளர் சித்திக் நன்றி கூறினார்.