பதிவு செய்த நாள்
28
ஜன
2019
01:01
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில், மூன்றாம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டத் தில், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.
இதில், மூன்றாம் ஆண்டு லட்சார்ச்சனை முன்னிட்டு, விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் உற்சவர் பிரதிஷ்டை செய்து, சிறப்பு யாக வேள்வி லட்சார்ச்சனை நடந்தது. அதை முன்னிட்டு, சிவன், ஆரணவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடத்தப்பட்டது.
பழையஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பூஜை யில் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.