பதிவு செய்த நாள்
28
ஜன
2019
02:01
புதுச்சத்திரம்:வாண்டையாம்பள்ளம் அடுத்த நைனார்குப்பம் சப்த கன்னிகள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 26ம் தேதி காலை 10.00 மணிக்கு விக்னேஸ் வர பூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், மாலை 3.00 மணிக்கு கரிக்கோலம், 5.00 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், 7.00 மணிக்கு முதற் கால யாகபூஜை துவக்கம். இரவு 9.00 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை, 10.00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று (27ம் தேதி) காலை 6.00 மணிக்கு
கோபூஜை, 7.00 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை, 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, 10.00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.