பதிவு செய்த நாள்
28
ஜன
2019
02:01
பேரூர்:பச்சாபாளையம் ஸ்ரீ ஜெகன்நாதன் நகரில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜன., 26ல்) காலை, 6:30 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடந்தது.தொடர்ந்து, புனித நதிகளின் தீர்த்தம், முளைப்பாரி அழைத்தல் நடந்தது.
பின்னர், ஷீரடி சாய்பாபா மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம், அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. மதியம், 2:00 மணிக்கு மேல், ஷீரடி சாய்பாபா சிலை பிரதிஷ்டை
செய்யப்பட்டது.நேற்று (ஜன., 27ல்) காலை, 5:45 மணிக்கு, மங்கள இசை, இரண்டாம் கால பூஜை மற்றும் மஹா தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நடந்தது.காலை, 8:15 மணிக்கு மேல், சாய் ஸ்ரீ ராமகிருஷ்ணன், சாய் ஸ்ரீ ராஜா சர்மா மற்றும் வேதவிற்பன்னர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர், ஷீரடி சாய்பாபா விமான கோபுர கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சாய்பாபா உருவ சிலை, பரிவார தேவதைகளுக்கு மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, தசதரிசனம் நடைபெற்றது.
விழாவில், ஸ்ரீ ஷீரடி சமஸ்தான் பிபின்தத்தா சங்கர் ராவ் கோலே பங்கேற்றார். ஸ்ரீ அசோக் சாய்ராம் பொதுநல அறக்கட்டளை சார்பில், விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன; திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.